தொடர்ந்து தெலுங்கு படங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கும் இயக்குநர் ராஜாவும் தெலுங்கு வெற்றிப் படங்களையே குறி வைக்கும் விஜயும் இணைந்து நேரடி தமிழ்ப்படத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலில் அவர்களிருவருக்கும் “ஞானி” யைப்போல் ஒரு பூங்கொத்து கொடுத்திடலாம். தனித்தன்மையில்லாமல் எப்போதுமே தெலுங்கு வெற்றி படங்களையே ரீமேக் செய்து வருகிறார்கள். தெலுங்கு படவுலகம் தமிழ் திறமையை அதிகம் நம்புபவர்கள். விஜய் என்ன செய்கிறார் என்றால் அங்கே பெரிய கதாநாயகரின் படம் மாபெரும் வெற்றி பெற்றால் அதன் ரீமேக் உரிமையை முதலிலே வாங்கி விடுவார். 5,6 வருடங்களுக்கு முன்பு தமிழ் டைரக்டர் “தரணி” டைரக்ட் செய்து சிரஞ்சீவி தம்பி பவன்கல்யாண் நடித்த “பங்காரம்” உரிமையை படம் வெளியாவதற்கு முன்பே வாங்கி விட்டார். அந்த படம் வெளியான அன்றே வெளியான மகேஷ்பாபுவின் “போக்கிரி” சூப்பர் டூப்பர் ஹிட். உடனே அதன் உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டார். பங்காரத்தை கிடப்பில் போட்டு விட்டார். நடிப்பிலும் மகேஷ்பாபுவை அப்படியே இமிடேட் வேற. என்னதான் அவரை இமிடேட் செய்தாலும் அவரளவிற்கு இவரால் பெர்ஃபார்ம் செய்ய முடியவில்லை. ரஜினிக்கூடத்தான் ரீமேக் படங்களில் நடிக்கிறார். சுமாராக வெற்றி பெற்ற படங்களின் [...]
பிரம்மாண்ட இயக்குநராக அழைக்கப்படும் ஷங்கர் தற்போது “3 இடியட்ஸ்” என்கிற ஹிந்தி படத்டை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவு புகழ் கொண்ட இயக்குநர் ரீமேக் செய்வது அவருடைய திறனுக்கு ஏற்ற செயலல்ல. இவரோ பிரம்மாண்ட இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு செலவை அதிகரிக்க செய்யுமளவிற்கு இவருடைய கற்பனையிருக்குமே தவிர்த்து குறையாது. ஷங்கர் படமென்றால் இருக்கும் எதிர்பார்ப்பு இதில் மிஸ்ஸிங்க்.ஏனென்றால் பெரும்பான்மையான இளைஞர்கள் “3 இடியட்ஸ்” பார்த்திருப்பார்கள். ரீமேக் விஷயத்திற்கு வந்தால் இவர் தன்னுடைய “முதல்வன்” திரைப்படத்தை ஹிந்தியில் இவரே ரீமேக் செய்தார். காட்சிக்கு காட்சி, பாடலுக்கு பாடல் அப்படியே மாற்றாமல் எடுத்தார். மாற்றினால் எங்கே படுத்துவிடுமோன்னு பயம்தான் காரணம். ஆனாலும் படம் ஊத்திக்கிச்சி. இந்த விஷயத்தில் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா திறமையாக, நமபிக்கையாக செயல்பட்டார். தன்னுடைய “குஷி” திரைப்படத்தை தெலுங்கிலே ரீமேக் செய்தார். தமிழிலே தேவாவின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். இருந்தாலும் தெலுங்கு மியூசிக் டைரக்டர் மணிஷர்மாவுடன் இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழைவிட தெலுங்கிலே பெரிய ஹிட்டாக்கினார். இவர் செலவை கண்டு எந்திரன் தயாரிப்பாளரே பயந்து மாறினார்கள்.வசூல் வருகிறது ஆனால் செலவு கம்மியில்லையே. தன் சொந்த கற்பனையான “எந்திரன்” [...]
மறுநாள் காலை 7 மணிக்கு ஷேர் ஆட்டோவில் கிளம்பி புத்தகயாவிற்கு சென்றேன். புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தை பார்த்தேன்.2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவங்கள் நடந்த இடத்தை பார்க்கிறேன். ஞானம் பெற்ற பின்பு அவர் நடந்த உலவிய இடத்தையும் பார்க்கையிலே அந்த காலம் எப்படியிருந்தது என்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் காலை 5 மணிக்கு ரயிலேறி மறுநாள் விஜயவாடாவிலிறங்கி அங்கிருந்து சித்தூர் வந்தடைந்தேன். இந்த ரயில் பயண்த்தில் தமிழ்நாட்டிலிருந்து “பேக்கேஜ்” டூர் வந்தவர்களை பார்க்கும்போது பாவமாயிருந்தது.வயதானவர்கள் மாத்திரைகளோடும், மேல்பெர்த்துகளில் படுக்க முடியாமலும் அவதிப்படுவதை பார்க்கும்போது இவர்கள் ஏன் வயதும், ஆரோக்கியமும் நல்ல நிலையிலிருக்கும்போதே இந்த மாதிரி தொலைதூர பயணங்களுக்கு போகலாமேன்னு தோனித்து. நான் இந்த பயணத்தை புனித புத்தபயணமாக போகவில்லை. கிருஸ்துவிற்கும் முன் தோன்றியவர் ஆசியா முழுக்க வணங்கப்படுபர். வரலாற்று சிறப்பு மிக்கவர்.அவர் நடமாடிய, வாழ்ந்து திரிந்த இடங்களை பார்க்க வேண்டுமென்று விரும்பி சென்று பார்த்தேன். இந்த பயணத்தில் நான் பார்த்தவைகள், ஆண்கள் எல்லோரும் பாக்கும் இன்னும் அதைபோன்ற ஏதோ ஒரு தூள்களையும் வாயில் குதப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிகரெட் கம்மிதான். ஸ்டேஸன்ல அவனவன் கை தட்டிண்டிருப்பான் திரும்பி பார்த்தா கையிலே [...]
சித்தூர் முருகேசன் எழுத்துக்களை வலையேற்றும் பாதையில் இரண்டாவது அடி மழை அதிலும் நள்ளிரவு நேரத்துமழை என்னில் ஒருவித அச்சத்தை கிளப்புகிறது. என் சிந்தனை பறவைகளின் சிறகுகள் நனைந்துவிட மோனக்கூடுகளில் முடங்கி விடுகின்றன. மழை என்பதென்ன? மேகத்தால் திரஸ்கரிக்கப்பட்ட தண்ணீர்த் திவலைகளின் தற்கொலையா? ஏனோ இந்த நள்ளிரவு மழை என்னில் அச்சத்தை கிளப்புகிறது. மழை என்ன மேகமங்கையரின் மாதாந்திர ரத்தப்போக்கா? ஏனிந்த அச்சம்… என் மனச் சுடலையில் முழுதாய் எரிக்கப்படாத நினைவுச்சவங்கள் நனைந்து விடும் என்றா இந்த அச்சம்? மழை அச்சம் தருதல் ஏன்? இது என் மனதில் புதைந்து கிடக்கும் எவ்வகை பிணத்தின் எச்சம்? இது முதுமையின் முன்னுரையோ? இறந்த காலத்தின் முடிவுரையோ? அச்சம் மட்டும் நிஜமே. அணைப்பின் சூடுதேடி அலைபாய்ந்த நாட்களில் அது மறுதலிக்கப்பட்டதன் நினைவை கிளறுதோ இம்மழை. எனக்காக அடைக்கப்பட்ட கதவ்களையும் ஜன்னல்களையும் ஈரப்படுத்துகிறதோ இந்த மழை. என் உடல் நனைவதில் ஒரு போதும் இருந்ததில்லை அச்சம். இருந்தும் இந்த அச்சம் என் மனதின் புனைவென்று புரிந்த போதும் ஏற்கனவே அறிமுகமானதாகவே தோன்றுகிறது இந்த அச்சம். என் கோட்டை சுவரின் கற்களையெல்லாம் மாற்றி வைத்து அவற்றின் இடைவெளிகளையெல்லாம் [...]
அனுபவஜோதிடம் வலை தளத்தை நடத்தி வரும் சித்தூர்.முருகேசனின் எழுத்துக்களில் இதுவரை வலையேற்றப்படாதவற்றை ஏற்றும் முயற்சியில் முதல் முயற்சி. சுயநலம் சுருங்கச் செய்யும் கண்களை, முகத்தை, உயிரை. இயற்கையின் மடியிலிருந்து இறங்கி மடியாய் இருக்க முயல்கையில் போராட்டம் ஆரம்பம். இயற்கையின் விதிகளுக்கு எதிராய் சதிகளின் சாதகம். இங்கு எதுவும் அதுவாகவே தொடர்தல் சாத்தியமில்லை. இங்கு எதுவும் அழிவுக்கு அந்நியமில்லை அதீதமில்லை. இது ஞானமுமில்லை, மோனமுமில்லை சின்ன புரிதல். புரிதலுக்கு புறங்காட்டி அழிவுக்கும் ஆக்கத்துக்குமாய் இழுபட்டு அவற்றின் அகரமோ, சிகரமோ அறியாது அழிவின் நகல்களூக்கும் ஆக்கத்தின் போலிகளுக்குமே ஆரத்தி காட்டி தன்னை எரித்தலால் பலவீனம். பலவீனத்தின் பாத்திகளில் மட்டுமே சுயநலம் விதைக்கப்படுகிறது. தமிழ்ல தத்துவம் என்றால் philosophy தெலுங்குல “தத்வம்”னா nature இயல்பு. அதனதன் தத்துவத்தை உள்ளபடி உணர்ந்து, புரிந்து, புரிதலோடு வாழ்தலே நல்வாழ்க்கை. தண்ணீரை மேடேற்றலாம் சக்தி தேவை. தீயை கீழ்நோக்கி பாய்ச்சலாம் சக்தி தேவை. சக்தியை எங்கிருந்தாச்சும் எடுக்கனும், அங்கே துண்டு விழும். அந்த துண்டை ஈடுகட்ட எங்கயோ வேட்டி கிழிபடும். “நான் நிரந்தரமானவன்”னு நினைக்கிறது மடமை. அப்படி மாற நினைக்கிறது மடமையிலும் மடமை. “நான்” என்பது நினைவுகளின் தொகுப்பென்றால் [...]
அசோகர்னா சாலையின் இருபுறமும் மரங்கள் நட்டார்.புத்தர்னா உலக துக்கங்களுக்கு ஆசையே காரணம் என்றார்.இதெல்லாம் ரெண்டு மூணாங்கிளாஸ்ல படிச்ச மேட்டரு. என்னடா சோகம்னா சனம் அந்த க்ளாஸ் லெவல் நாலெட்ஜுலயே நின்னுர்ராய்ங்க. ஆனால் என்னோட புத்தகயா பயணத்துக்கு ரெண்டு மூணாங்கிளாஸ்ல படிச்ச மேட்டரும் ஒரு காரணம்தான். திருப்பதியில் ஞாயிறு இரவு தொடங்கிய இரயில் பயணம் செவ்வாய் காலை 7.00 மணிக்கு காசியில் முடிந்தது. வெயிட்டிங் ரூமிலே குளித்துவிட்டு லக்கேஜை க்ளாக் ரூமிலே 10 ரூபாய் வாடகைக்கு வைத்துவிட்டு கேமிராவை எடுத்துக்கினு வெளியே வந்தேன். சாரநாத் செல்ல 20 ரூ. வாடகையில் ஷேர் ஆட்டோவில் போயிறங்கினேன். புத்தர் சங்கம் நிறுவியது இங்குதான். தன் முதல் பிரசங்கத்தை இங்குதான் தொடங்கினார். (புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி ஞா இருக்கில்லை) சங்கம்னா சமுதாயம்னு அருத்தம். சமுதாயத்தை தவிர்க்காத – சமுதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த மொதல் ஆன்மீக வாதி புத்தர் தான். அவர் தியானம் செய்த இடங்கள், அசோகரின் ஸ்தூபங்கள்(தூண்கள்) பார்த்தேன். இங்கு முழுக்க ஏசியுடன் கூடிய அருங்காட்சியகத்தில் அரிதான கி.மு.2,3ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்களையும் காணலாம். ( அந்த கல்வெட்டு மொழி [...]
ஒரு ஊருக்கு போகும்போது டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தால் அதை ஒரு ஜிராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அது செல்லாது என்றாலும் டிக்கெட் தொலைந்துடுத்துன்னா ஏதோ உதவும். புறப்புடு முன்னே இந்த ப்ரஷ், பேஸ்ட், மொபைல் சார்ஜர், மறக்காம எடுத்துக்கனும். இல்லைன்னாலும் பக்கத்திலிருப்பவரிடம் வாங்கிக்கலாம்.அவரும் நம்ம மாதிரியே வந்திருந்தா? கம்பார்ட்மெண்டில் சாப்பிடும்போது அக்கம் பக்கம் சிறுவர்களிருந்தால் அவர்களுக்கும் கொடுத்து சாப்பிடனும். இல்ல விலகிப்போயாவது சாப்பிடனும். லக்கேஜ் ரூமிலே பேகை வைக்குனம்னா பேகை பூட்டியிருந்தாதான் அனுமதிப்பாங்க.அதனால ஒரு சின்ன பூட்டு எடுத்துக்கோங்க. அப்படியே உங்க ஐ.டி.கார்டையும் எடுத்துக்கங்க. லாட்ஜிலே ரூம் போடும்போது தேவைப்படும். நாம இறங்க வேண்டிய ஊருக்கு முன்னாடியே வண்டியில் பயணிக்கும் அந்த ஊர்க்காரர்களிடம் நீங்க போகவேண்டிய இடத்திற்கான விவரங்களை கேட்டுக்கிட்டா நல்லது. தூங்கப்போகும் முன் செருப்பை சீட்டுக்கடியில் விடும்போது ஒரு செருப்பை இந்தபக்கமும் அடுத்ததை அந்தபக்கம் விடுங்கள். நாமதான் நம்ம பயணத்தை முடிந்தவரை அவதியில்லாமல் பார்த்துக்கனும்.
விளையாட்டை மறக்கும் பள்ளிகள் இப்போதெல்லாம் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை பார்ப்பது அரிதாகி வருகிறது. அப்படியே இருந்தாலும் விளையாடுவது? பசங்களை படிப்பு படிப்புன்னு விரட்டறாங்க, விளையாடுவதற்கு அவர்களை உற்சாகப் படுத்துவதில்லை. “மாலை முழுதும் விளையாட்டு” போய் வெறும் படிப்பேயென்றாகி விட்டது. நூறு கோடியை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் நம் ஜனத்தொகையில் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கம் வென்றிருக்கிறோம். மற்ற போட்டிகளில் ஒன்றும் காணோம். பள்ளிப்பருவத்திலே அவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி தயார் செய்தால்தானே நமக்கு திறமையான வீரர்கள் கிடைப்பார்கள். பள்ளிக்காகவோ, ஊருக்காகவோ, மாநிலத்திற்காகவோ, நாட்டுக்காகவோ விளையாடுவதை விடுங்கள். தங்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவாவது பயன்படுமல்லவா? பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் எல்லா பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் படத்தோடு விளம்பரங்கள் கொடுக்கிறார்கள். விளையாட்டில் சாதித்தவர்கள் என்று எந்த மாணவர்களின் பெயர்களும் வருவதில்லை. நாங்கள் ஆண்டுதோரும் நடத்தும் ஓவியப்போட்டிகளில் மாணவர்களுக்கு தலைப்பு கொடுக்கும்போது அவர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் புரியவைக்க “உங்கள் பள்ளி விளையாட்டு மைதானம்” என்று சில வருடங்கள் கொடுத்தோம். இப்போதெல்லாம் வயதாகி உடம்பெல்லாம் பெருத்த பிறகு வாக்கிங்க், உடற்பயிற்சி, தியானம் என்றெல்லாம் போகிறார்கள். பள்ளி காலங்களிலேயே பழகியிருந்தால் சிரமமிருக்காதல்லவா? [...]
கடந்த ஒருமாத காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாகி வரும் ரஜினியின் வீட்டை வாஸ்து சரியில்லையென்று இப்போது வாஸ்துகள் மாற்றி அமைத்து வருவதாய் செய்தி. பல வருடங்களாய் அந்த வீட்டிலே குடியிருந்துகொண்டு தொடர்ந்து பெரிய வெற்றிகளை குவித்து கொண்டிருந்தபோது நல்லாயிருந்த வாஸ்துக்கு திடீர்னு என்ன ஆயிற்று. வயது கூடும்போது உடல் உபாதைகள், நோய்கள் வராதா? உடல்நிலை பாதித்தால் மருத்துவரை நாடலாம். வாஸ்து எந்த வகையிலே உதவும்? வாஸ்து மாற்றி சில மூலிகைகளை நடப்போகிறார்களாம். மூலிகையை மருந்தாக பயன்படுத்தலாம். பயிரிட்டால் நலமடைய முடியுமா? இந்தியத் திரையுலகிலே 60 வயதையுடைய நடிகர் இவர் அளவிற்கு மார்க்கெட் கொண்டவர்கள் யாருமில்லை. தமிழுக்கு இணையான மார்க்கெட் தெலுங்கிலும் கொண்டவர். இதெல்லாம் அந்த வீட்டில் வசிக்கும்போதுதானே நடந்தது. திடீரென வாஸ்துக்கும் முடியாமல் போய்விட்டதா? நோயே வராமலிருக்க அவரென்ன ரோபாவா? மனீதன்தானே.
எனக்கு குடிப்பழக்கமில்ல்லாத போதும் இரவு நேரங்களில் அவர்களோடு நிறைய நாட்கள் கழிந்திருக்கு. சரக்கு உள்ளே போனதும் ஒருத்தொருத்த ஒரொரு விதமா நடப்பான். அவனவன்ல ஒவ்வொரு குணம் வெளிப்படும். அவங்க சைக்காலஜிங்க விதவிதமா வேடிக்கையாயிருக்கும். கஞ்சனாயிருப்பான், அவன் கொஞ்சம் போதையானதும் செலவு பறக்கும். எல்லோரையும் வேண்டி வேண்டி கவனிப்பான். பட்ஜெட்ல அடிக்கிறவங்க போகும்போது ஆளுக்கு க்வார்ட்டர்னு போவானுங்க அதுக்குத்தான் காசு சரியா இருக்குதுன்னு போயி முக்காலடிப்பாங்க. காசு எங்கிருந்தெல்லாமோ எடுப்பானுங்க. எந்த பிரச்சினை சொன்னாலும் “நாளைக்கு முடிச்சிடலாம்”னு சொல்லிட்டு காலையிலே அவனவன் வேலையப்பார்த்திண்டிருப்பான். வெளியூரிலே தண்ணியடிக்கையிலே ‘ஸைட்டிஷ் தீர்ந்திடிச்சி’னு அறிந்த முன்னபின்ன தெரியாத பக்கத்து கு.ம. தான் ஆர்டர் செய்ததை கனிவோடு கொடுக்கும் செயலை பார்த்தால் “இவர் வீட்டிலே இப்படியெல்லாம் இருப்பாரா?”ன்னு தோன்றும். ஒருத்தர் என்ன நடந்தாலும் பேசாமல் அமைதியாக இருப்பார். எப்போதும் அமைதியாக இருக்கும் இன்னொருத்தர் சதா பேசிக்கொண்டேயிருப்பார். வசூலாகாத பணத்திற்காக “மேட்டர்” போட்டுட்டு அவர்கள் வீடு சென்று வசூல் செய்வாரொருத்தர். ரூமிலே தண்ணியடிக்க பெர்மிஷன் கேட்டுக்கிட்டு வரும்போது தண்ணியும் மிக்சருமாய் வருவார் வந்து அடிச்சதும் நம்மை பிரியாணி சாப்பிடு, டிபன் சாப்பிடுன்னு வேண்டி மறுபடியும் போய் வாங்கி வந்து [...]







